Google Chrome பயன்பாடு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை – கவனமாக இருங்க மக்களே!
கூகுள் குரோம் பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்னும் நிலை உள்ள தற்போதைய சூழலில், இந்த தேடுபொறி மூலம் பயனர்களுக்கு ஆபத்து உள்ளது என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசின் எச்சரிக்கை:
இணையம் என்பது தற்போதைய வாழ்வில் மிகவும் அவசியமான விஷயங்களில் ஒன்றாகி விட்டது. பள்ளி மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் வரை இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையத்தில் தங்களுக்குய தேவையான தகவல்கள் அனைத்தையும் தேடுவதற்கு மக்கள் கூகுள் குரோம் ஐ தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், 112.0.5615.121க்கு முந்தைய கூகுள் குரோம் அப்டேட்டை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) கூகுள் குரோமில் பாதிப்பு உள்ளதாகவும், இதனால் பயனர்களின் சாதனங்கள் ரிமோட் அட்டாக்கர் மூலம் தாக்கப்பட்டு, ஹாக் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், கூகுள் குரோம் பயனர்கள் சமீபத்திய அப்டேட் ஐ பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
0 Comments