ஜெய் ஸ்ரீ ராம்...
பாரத் மாதாகீ ஜெய்...
ஓம் காளி ஜெய் காளி...
இந்த கோசங்கள் உன்மையிலேயே அழகான வார்த்தைகள் தான்.
ஒரு உண்மையான ராம பக்தன் ஒரு சந்தோசமான நிலையிலையோ அல்லது துக்கமான நிலையிலோ தனது நாவால் மனதால் அமைதியான முறையில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற நாமத்தை சொல்லும் போது அது அவரின் நம்பிக்கையின் அடிப்படையில் அழகான நாமமாக அவரின் மன அமைதியை தரும் நிறைவை தரும்...
பல மடங்களில் ஓம் நம சிவாய என்கிற நாமம் ஒலிப்பதை கேட்டிருப்போம் ஒரு அமைதியான கணீரென்ற குரலில் பின்ணனி வயலின் இசையோடு அது கேட்கும் மதம் தாண்டி கூட அதன் வசீகரம் ஒரு மன அமைதியை கொடுக்கும் ....
இப்படி தான் மதங்களின் முன்னோடிகள் மனிதனை சாந்தப்படுத்தும் மனதை அமைதிபடுத்தும் மனதை நிறைவு படுத்தும் நாமங்களை மனிதர்களுக்கு கற்று கொடுத்தனர்....
ஆனால் இன்று அந்த நாமங்களை சில தவறி பிறந்த அயோக்கிய முண்டங்களால் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தபடுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்...
மனிதனை சாந்திபடுத்த சொல்லப்பட்ட நாமங்கள் இன்று ஆக்ரோஷமாக கும்பலாக கத்திக்கொண்டு மனித உயிர்களை படுகொலை செய்ய பயன்படுகிறது என்று சொன்னால் அத்தகைய கேடுகெட்ட இழிநிலையை உருவாக்கும் இந்த சங்கபரிவார கும்பல்களை வேடிக்கை பார்ப்பது மனித குலத்திற்கு எதிரானது மவுனம் காப்பது மனித மான்புக்கு ஒவ்வாதது....
எந்த அளவிற்கு இந்த மதவெறி அரசியல் செல்கிறது என்றால் புல்வாமா தாக்குதலில் நடந்த முறைகேடுகள் இன்றைக்கு வெளிவருகிறது எவ்வளவு அவமானகரமான ஈன செயல்கள் அதனுள் புதைந்து கிடக்கிறது ஒட்டு மொத்த நாடே துடி துடித்த போது அதிலும் சில அர்ப்ப அரசியல் காய்நகர்த்தல் நடந்து இருக்கிறது என்றால்... வெறும் அதிகாரத்தை பெறுவதற்கு எந்த வெட்க்க கேடான அபாயகரமான செயலையும் செய்யலாம் அதை மத பற்றாக நாட்டு பற்றாக மாற்றி ஒட்டை அறுவடை செய்யலாம் என்றால் எம் தேசம் அதன் நிறத்தை சென்னிறமாக மாற்றுவதோடு தனது மீது படர்ந்து பாந்து செல்லும் நதிகளின் நிறம் கூட செந்நிறம் ஆகிடுமோ ......
இதற்கு முன் நடந்த கரசேவகர்கள் எரிப்பில் கூட இத்தகைய மிகப்பெரிய சந்தேக மர்மங்கள் நிறைந்துள்ளது இப்படி சொந்த வீட்டில் தீவைத்து அதில் தனது உறவுகளை பலி கொடுத்து அர்ப்ப ஆதாயங்கள் தேடும் அயோக்கிய பிறவிகளுக்கு என்ன பெயர் சூடுவதோ...
நேற்று உபி யில் மனித மாமிசத்தை மட்டுமே கொண்டு ஒரு உருவத்தால் காட்டாட்சி நடைபெறுவதும் சிறுபாண்மை உள்ளிட்ட தலித் உள்ளிட்ட பெண்கள் உள்ளிட்ட எந்த சமூகமும் அமைதியாகவோ நிம்மதியாகவோ வாழ முடியாத சூழ்நிலையில் இருக்கு ஒரு நிலையில் முன்னாள் மக்கள் பிரதிநிதியும் முழுமையான காவல்துறை கட்டுபாட்டில் இருந்தவரும் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் முழங்க சுட்டு கொல்லப்பட்டார் என்றால் புல்டோசர்களின் நான்கு சக்கரங்களும் காற்று இல்லாமல் சப்பையாக கிடக்கிறது ஒரு வேளை பெயர்கள் முகம்மதுகளாக அகமதுகளாக இருந்தால் யோகிகள் புள்டோசரை முதுகில் சும்ந்தாவது குற்றவாளிகளின் வீட்டின் முன் நிறுத்தி இருப்பார்கள்....
NIA க்கள் உடைக்கப்பட்ட வீட்டில் சிதிலங்களுக்கிடையில் அரபி எழுத்துக்களை தேடி இருப்பார்கள்.. ஆனால் ஒலித்த கோஷம் ஜெய் ஸ்ரீ ராம் அல்லவா .....
இந்தியா மோசமான சூழ்நிலையை நோக்கி கடந்த 9 ஆண்டாக அதிகாரத்தின் பெயராலும் கடந்த 90 ஆண்டாக மதவாத RSS உள்ளிட்ட சங்கபரிவாராலும் தவறாக வழி நடத்தப்பட்டு வருகிறது...
இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் ஆபத்து தானே தவிர ஒரு சில சமூகத்துக்கு மட்டும் எதிரானது அல்ல....
0 Comments