கர்நாடகா தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக..!

 தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக..!

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை அனைத்து தொகுதிகளிலும் சூடுபிடித்துள்ளது.

  • NEWS18 TAMIL
  • 1-MIN READ
  • LAST UPDATED : 
  • KARNATAKA, INDIA

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சி.வி ராமன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு பிரமாண்ட பேரணி நடத்தினார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, அனைத்து கட்சியினராலும் சூறாவளி பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் இன்று பேரணி நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய சி.வி. ராமன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு பிரமாண்ட பேரணி மேற்கொண்டார்.

தனித் தொகுதியான சி.வி.ராமன் நகரில், பாஜக சார்பில் போட்டியிடும் ரகுவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் போட்டியிடுகிறார். சி.வி.ராமன் நகர் தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் வசிக்கும் நிலையில், அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர்.

Also Read : ஒரே மணி நேரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைத்த ரூ.19.35 கோடி - எப்படி தெரியுமா?

இதனால், இந்த தொகுதியில் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சி.வி ராமன் நகர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏவாக ரகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முறையும் ரகு வெற்றி பெறுவார் என்று தொகுதியில் வசிக்கும் தமிழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments